Why K.Ramachandran should get married ?

முதலாவதாக நான் சொல்ல வருவது என்னவென்றால், 96 படத்தின் மிகத்தீவிரமான ரசிகன் நான். அந்த படத்தில் எல்லாமே அருமையாக இருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. எல்லாரும் சொல்கிறார்கள் ராம் கேரக்டர் அநியாயத்துக்கு நல்லது, அதனால் அவர் கடைசி வரை வேறு பெண்ணை பார்க்கவில்லை என்று. ஆனால் இது தவறு என்று தோன்றுகிறது. ராம் திருமணம் செய்திருக்க வேண்டும். அதற்கான காரணங்களை கீழே சொல்கிறேன் பாருங்கள்.

  • முதலாவது காரணம். ராம் 36 வயது நிரம்பிய கன்னி பையன். அதற்கு என்ன என்று கேள்வி கேட்க வேண்டாம்.. அந்த வயதில் அப்படி இருந்தால் புரியும்.
  • ஜானு வந்து அனைத்தையும் சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் குடுபத்தோடு நிம்மதியாக இருக்கிறாள். அவளுக்கு நாள் எதிர்காலம் அமைந்து விட்டது. ஆனால் ராமுக்கு யாரும் இல்லை.
  • ராம் இரண்டு தாலைமுறையாக பேச்சிலராகவே இருந்து வாழ்க்கை ஓடி விட்டது. வெகுளியானவர், சிறந்த காதல் நயம் மிக்கவர். இப்போது அவரை பார்த்துக்கொள்ள அன்பான ஒரு துணை நிச்சயம் வேண்டும்.
  • ராம் என்பதை ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே பார்க்க வேண்டாம். அந்த இடத்தில் உங்களை வைத்து யோசித்து பாருங்கள். 36 வயது வரை குடும்பம், உறவுகள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை பூர்த்தியாகி விடுமா..? நிச்சயம் இருக்காது.
  • இப்போது 36 வயதாகிறது. தனியாக இருந்து விடலாம். இதுவே வயதாகிவிட்டால் யார் பார்த்து கொள்வார்கள்.

சரி, இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? ராமுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று மனதார விரும்புகிறீர்களா..? அப்படிஎன்றால் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று வாக்களியுங்கள்.

  



Results

Please share this until Director C. Prem Kumar gives clarity on this.